×

ஓட்டல்களில் யார், யார் சாப்பிடலாம்? அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளைக்கொண்ட வாடிக்கையாளர்களை உணவகங்களில் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓட்டல் பணியாளர்கள், ஊழியர்கள், பார்வையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்: ஊழியர்களுக்கு சமூக இடைவெளி 6 அடி, மாஸ்க், முகமூடி கட்டாயம். இருமும் போதும், தும்மும் போதும் வாய், மூக்கை டிஸ்யூ, கைக்குட்டையால் மூட வேண்டும். பிறகு அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கண்டிப்பாக துப்புக் கூடாது. ஓட்டல் நிர்வாகத்திற்கான வழிகாட்டுதல்கள்: நுழைவாயிலில் சானிடைசர், தெர்மல் ஸ்கேனர் வைக்க வேண்டும். நோய் அறிகுறி உள்ள வாடிக்கையாளரை அனுமதிக்க கூடாது. ஊழியர்களுக்கு கையுறை முக்கியம். வாகனங்களின் ஸ்டியரிங், கதவு, கைப்பிடிகள், சாவிகள் போன்றவற்றை முறையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

லிப்டில் சமூக இடைவெளி வேண்டும். க்யூ-ஆர் கோடு, ஆன்லைன் படிவங்கள், டிஜிட்டல் பேமென்ட் செயல்முறைகளை பின்பற்ற வேண்டும். உணவு விநியோக ஊழியர்கள் நேரடியாக பெறுநரிடம் ஒப்படைக்கக்கூடாது. வாசலில் விட்டுவிட வேண்டும். வீட்டு டெலிவரிக்கு ஊழியரை பரிசோதிக்க வேண்டும். விளையாட்டு மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதிகள் மூடப்பட வேண்டும். நோயாளிகளை கையாளும் வழிமுறைகள்: நோய்வாய்ப்பட்ட நபரை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அல்லது பகுதியில் வைக்க வேண்டும். மாஸ்க் வழங்க வேண்டும். மருத்துவமனை, மாநில அல்லது மாவட்ட உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஓட்டல்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளைக்கொண்ட வாடிக்கையாளர்களை உணவகங்களில் அனுமதிக்கக்கூடாது. உணவகங்களில் இருக்கை திறனில் 50 சதவீதத்துக்கு அதிகமாக வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது.

* திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் பங்கேற்கலாம்
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம். இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம். வயதானவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் வீட்டுக்குள் இருக்க வேண்டும். ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் மது அருந்துதல், பான், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த கூடாது. கை கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவை கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது. யாராவது இவற்றை மீறி நடந்தால், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : hotels , In hotels, who, who can eat? , Government Guidelines, Publication
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்