×

மாநகர காவல்துறையில் 20 போலீசாருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,242ஆக உயர்வு

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் 20 போலீசாருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் ஊரடங்கு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மாநகர காவல்துறையில் நேற்று ஒரே நாளில் 20 போலீசாருக்கு தொற்று உறுதியானது. அதைதொடர்ந்து அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதன் காரணமாக, சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை மொத்தம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,242 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 9 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பினர். இதுவரை மாநகர காவல்துறையில் தொற்றில் இருந்து குணமடைந்து 1,820 போலீசார் பணிக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : policemen ,Corona ,Metropolitan Police ,victims , The Metropolitan Police, Corona, number 20 policemen, rising to 2,242
× RELATED உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,328,034 ஆக உயர்வு