×

மறைந்த வசந்தகுமார் எம்.பி. புகைப்படத் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து குஷ்பு அதிருப்தி

சென்னை : மறைந்த வசந்தகுமார் எம்.பி. புகைப்படத் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து குஷ்பு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

உயர்வான செயல். ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவில் யாருக்குமே இது பற்றிய தகவல் சொல்லப்படவில்லை. தமிழகத்தில் இருக்கும் ஒரே தேசிய செய்தித் தொடர்பாளர் நான்தான். ஆனால் நான் இந்தத் தகவலைச் செய்தித்தாள்கள் மூலமாகத் தெரிந்து கொள்கிறேன். நாம் நம் வலிமையை அதிகரிக்க வேண்டும். நமது பாதுகாப்பற்ற மனநிலை, அகந்தை (ஈகோ) காரணமாக பலவீனமாக்கக் கூடாது. எப்போது அதைச் செய்வோம்?.

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

Tags : Khushboo ,Vasantha Kumar ,photo opening ceremony , The late Vasantha Kumar MP Khushboo dissatisfied with not being invited to the photo opening ceremony
× RELATED மனவளர்ச்சி குன்றியோரை...