×

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: திருச்செந்தூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக திருச்செந்தூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்து செயல்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.தொடர்ந்து, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

 நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை நடத்த தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதனை அடுத்து, டெல்லி சிபிஐ கூடுதல் எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ குழுவினர், வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் திரு  விஜயகுமார் சுக்லா தலைமையிலான 6 அதிகாரிகள் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்சின்   உறவினர் மைக்கல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் பெண் தலைமை காவலர் பியூலா செல்வகுமாரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

Tags : Sathankulam ,CBI ,Thiruchendur Authorities , Sathankulam, father, son, murder case, Thiruchendur, CBI. Officers
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...