சென்னை : கிளப், ஹோட்டல்களுக்கான வழிபாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.. அவை பின்வருமாறு..
*தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கையுறை அணிதல் போன்ற விதிகளை பின்பற்ற வேண்டும்
*ஹோட்டல்களுக்கு வருவோரின் உடமைகள் உரிய முறையில் சுத்தம் செய்த பிறகே அறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
*உணவகத்தில் உணவு தயாரிக்கும் பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் வேண்டும்
*ஹோட்டல், கிளப் வரவேற்பறையில் கிருமி நாசினி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
*கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஹோட்டல்கள், கிளப் செயல்பட அனுமதி இல்லை
*உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
*உணவகங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிகளை பணியமர்த்தக்கூடாது
*வாகன நிறுத்துமிடங்களில் உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.