×

உளுந்தூர்பேட்டை அருகே நர்சிங் மாணவி தற்கொலை!: ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு..!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்பதற்காக தந்தை திட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது  உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பழைய நன்னாவரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் நித்யா என்பவரே உயிரை மாய்த்துக் கொண்டவராவார். சேலத்தில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்த அவர், கடந்த 25ம் தேதி ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்று அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்து விரக்தியடைந்த மாணவி நித்யா, தற்கொலைக்கு முயன்று எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நித்யா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்பதற்காக தந்தை திட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாத சூழ்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் வீட்டில் இருந்தப்படியே ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் பாடங்களை கற்று வருகின்றனர்.

Tags : Nursing student ,Ulundurpet ,suicide ,Parents ,attention Nursing student , Nursing student, commits suicide , Ulundurpet,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...