×

உடல் நலக்குறைவால் ஷின்சோ அபே பதவி விலகல்.! செப்டம்பர் 17-ம் தேதி ஜப்பானின் புதிய பிரதமர் அறிவிப்பு

டோக்கியோ: உடல் நலக்குறைவால் ஷின்சோ அபே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில் ஜப்பானின் புதிய பிரதமர் யார்  என்பது குறித்த தகவல்கள் செப்டம்பர் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராக இருந்து ஷின்சோ அபேவுக்கு பெருங்குடல் புண் நோய் இருந்தது. அதற்கு அவர் சிகிச்சைகளும் மேற்கொண்டு வந்தார். ஜப்பான் நாட்டின் பிரதமராக நீண்டகாலம் பதவி வகித்தவர் ஷின்சோ அபே ஆவார். சிகிச்சைகக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் ஷின்சோ அபேவுக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார். இந்நிலையில் லிபரல் டெமாகிரேடிக் கட்சி தலைமையில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு செப்டம்பர் 1 ஆம் தேதி கூடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து செப்டம்பர் 13 - 15 ம் தேதிக்குள் கட்சியிலிருந்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் 17 ம் தேதி நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு தற்போது வயது 65 ஆகும். லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக அதிக காலம் பதவி வகித்தவர் என்று பெருமைக்கு ஷின்சோ அபே சொந்தக்காரர்.  ஜப்பான் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்ததில் முக்கிய பங்கு கொண்டவர். இப்படி தனது நாட்டுக்கு பல நல்ல திட்டங்களையும், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஷின்சோ அபே ஆவார். 2006 ஆண்டு முதல் 2007 ஆண்டு வரை பிரதமர் பதவி வகித்த பின் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் 2012 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Shinzo Abe ,Japan ,Announcement , Ill health, Shinzo Abe, resignation, Japan, Prime Minister
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...