×

அதிமுக எல்லை மீறி பேசுவது கூட்டணிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும்...: அமைச்சர்களுக்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை

மதுரை: கொரோனா பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ,க தேசிய செயலர் ஹெச்.ராஜா, கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு, என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை உரசி பார்க்கக்கூடாது. ஹெச்.ராஜா சொன்ன சொற்கள் அவருக்கு தான் பொருந்தும் என பதிலடி கொடுத்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் அளித்த பேட்டி ஒன்றில், டெல்லிக்கு பா.ஜ.க ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மீதான தமிழக அமைச்சர்களின் விமர்சனம் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக எல்லை மீறி பேசுவது கூட்டணிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். அமைச்சர்கள் ஜெயக்குமாரும், செல்லூர் ராஜூவும் பேசுவது சரியல்ல. தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது, தோழமை சுட்டுதலோடு குறைகளை மட்டுமே சொல்கிறேன். பாஜக இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது. நாடு முழுவதும் இருப்பதைப் போல் தமிழகத்திலும் பாஜக தேர்தல் நடவடிக்கை இருக்கும். நிதியமைச்சர் நிர்மலாவை விமர்சித்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மன்னிப்பு கேட்க வேண்டும், என கூறியுள்ளார்.


Tags : H. Raja ,AIADMK ,ministers ,alliance , AIADMK, Coalition, BJP, H. Raja
× RELATED பாஜகவில் எனக்கு புதிய பொறுப்பு வழங்குவார்கள்.: ஹெச்.ராஜா