×

முழு ஊரடங்கால் திண்டுக்கல் மாவட்டம் வெறிச்’

திண்டுக்கல்: கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. திண்டுக்கல்லில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. திண்டுக்கல் பஸ்நிலையம், பெரியகடை வீதி, பழனி ரோடு, மணிக்கூண்டு சாலை, தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா, திருச்சி ரோடு, சீலப்பாடி பைபாஸ் ஆகிய அனைத்து பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள், வாடகைக்கார்கள் ஓடவில்லை. பஜார்களில் உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட் டிருந்தன. தாடிக்கொ ம்பு காவல் நிலைய எஸ்ஐ மற்றும் போலீசார் திருச்சி ரோடு அஞ்சலி ரவுண்டானா பைபாஸில் வாகன தணிக்கை செய்தனர்.

டூவீலரில் சென்ற இளைஞர்களை நிறுத்தி சோதனை செய்தனர். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தவாகனங்களைப் பறிமுதல் செய்து தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒட்டன்சத்திரம்: முழு ஊரடங்கான நேற்று ஒட்டன்சத்திரத்தில் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், காமராஜர் மார்க்கெட், செக்போஸ்ட், தாராபுரம் சாலை மற்றும் நகரில் உள்ள அனைத்து பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.  ஞாயிறு விடுமுறையில் பொதுமக்கள் இறைச்சி, மீன், சிக்கன் வாங்கி அசைவ உணவுகளை சமைப்பது வழக்கம். ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கால் பெரும்பாலனோர், நேற்று முன்தினம் சனிக்கிழமையே தங்களுக்கு தேவையான இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கினர். நேற்று காலை முதல் பஸ்நிலையம், காவல்நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அவசியமின்றி டூவீலர்களில் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags : Dindigul district , Dindigul district, full swing
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...