அங்கொட லொக்கா குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் - ராமேஸ்வரம் படகு உரிமையாளருக்கும் கடத்தலில் தொடர்பு!..சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை!!!

இலங்கை:  மறைந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா ஊட்டச்சத்து உணவுகள் போர்வையில் போதை மருந்தை உபயோகித்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது. பிரதீப் சிங் என்ற பெயரில் கடந்த 2018ம் ஆண்டு முதல் கோவையில் வசித்து வந்த அங்கொட லொக்கா, கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த அம்மானிதாஞ்சி, மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை திரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜிம்மில் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து உணவுகள் போர்வையில் அங்கொட லொக்கா ஹெராயின்  உள்ளிட்ட போதைப்பொருட்களை சப்பளை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இதற்காக பெரிய குழுவே இயங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து இலங்கை வழியாக தமிழகத்திற்கு போதைப்பொருளை கடத்துவதில், ராமேஸ்வரத்தை சேர்ந்த படகு உரிமையாளர்களும் சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் மேலும் பலர் சிக்குவார் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>