×

பேச்சுவார்த்தையை மீறி லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்!: இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 29ம் தேதி இரவில் சீன ராணுவம் பேச்சுவார்த்தை உடன்படிக்கைகளை மீறி செயல்பட்டது என்று இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. பாங்காங் சோ ஏரி பகுதியில் அத்துமீற முயன்ற சீன வீரர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் பாங்காங் சோ ஏரி அருகே சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக இந்திய ராணுவம்  தெரிவித்துள்ளது. மேலும் சீனா ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடிக்கப்பட்டது எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம், ஆனால் அத்துமீறல்களை பொறுக்கமாட்டோம் என்று ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

 கடந்த ஜூன் மாதத்தில் சீன ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்களால் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்தியா உடனான மோதலில் 35 சீன வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், சீனா இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இரு தரப்புக்கும் இடையே மோதல் கடுமையானதால், பதற்றத்தை தணிக்க ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எல்லைப் பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் பேசித் தீர்க்கவே விரும்புவதாக சீன அரசு கூறுகிறது. ஆனால், எல்லையில் களத்திலோ பிரச்சினையை தீர்க்க சீன ராணுவம் ஒத்துழைக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி செயல்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

 தொடர்ந்து, ராணுவ, அரசு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தை உடன்படிக்கையை மீறும் வகையில் சீனா செயல்பட்டது. லடாக் எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags : army ,Chinese ,talks ,border ,Ladakh ,Indian Army ,India ,Pangong Lake In Eastern Ladakh ,China Clash , India,India,Pangong ,Eastern Ladakh
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...