×

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி: தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

சென்னை: பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. தற்போது புறநகர் ரயில் சேவை, பள்ளி கல்லூரிகள், தியேட்டர் உள்ளிட்டவை திறக்க மட்டுமே தடை தொடர்கிறது.

இதனிடையே அதிமுக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு பரவியதால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இல.கணேசனுக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Ila Ganesan ,BJP ,hospital , BJP, Ila Ganesan, Corona, Private Hospital
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...