×

கல்வான் மோதல் எதிரொலியாக இராணுவத்தை நவீனப்படுத்தும் இந்தியா! ரூ.55000 கோடியில் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க திட்டம்!!!

இந்தியா:  இந்திய கடற்படைக்கு 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை சுமார் 55 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு சர்வதேச அரசியலில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரம் காட்டும் இந்தியா வர்த்தகத்தில், பல கட்டுப்பாடுகளை விதித்ததுடன் தென்சீன கடலுக்கு விமானம் தாங்கி போர் கப்பல்களையும் அனுப்பியுள்ளது.

 இதன் தொடர்ச்சியாக இந்திய பெருங்கடலில் இராணுவ இருப்பை அதிகரிக்க, கடற்படையில் வலிமையை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக 55 ஆயிரம் கோடி மதிப்பில் 6 மரபுசார் நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான மெகா திட்டத்திற்கான ஏல நடவடிக்கைகள் தொடங்கும் நிலையில் உள்ளன. மேலும் இதற்கான முன்மொழிவு கோரிக்கைகள் அக்டோபர்  மாதத்துக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இது மேக் இன் இந்தியா எனும் திட்டத்தின் கீழ் கூட்டு திட்டமாக நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல் அண்ட் டி குழுமம் மற்றும் அரசு துறை நிறுவனமான மசாகான் டாக்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டும்தான் பட்டியலில் உள்ள இந்திய நிறுவனங்கள் ஆகும். வெளிநாட்டு நிறுவனங்கள் பட்டியலில் ஜெர்மனியின் தைஃபன் குரூப் மரைன் சிஸ்டம் உட்பட 5 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தேர்வாகும் இந்திய நிறுவனம், பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 வெளிநாட்டு நிறுவனங்களில் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே நீர்மூழ்கி கப்பலை கட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : army ,India ,conflict ,Kalwan ,Under , submarine, make in india, rs 55,000 crore, india, plan,
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...