×

ராகுல் காந்தி தலைமையை தடுப்பது கட்சியை சீர்குலைக்க உதவுவதோடு அதனை அழித்துவிடும்: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்

மும்பை: ராகுல் காந்தி தலைமையை தடுப்பது கட்சியை சீர்குலைக்க உதவுவதோடு அதனை அழித்துவிடும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார். காங்கிரஸ் தலைமை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு சோனியா காந்தி இடைக்கால தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கிடையில்,கட்சிக்கு நிரந்தரமான, பொறுப்புகளை ஏற்க கூடிய தலைவர் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த 23ம் தேதி கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்விகாரம் குறித்து சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி. தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் ராகுல் காந்தி காங்கிரசுக்கு தலைமை ஏற்பதை தடுப்பது அக்கட்சியை அழித்துவிடும் என எச்சரித்துள்ளாா்.

மேலும் அவர் பிரதமர் மோடிக்கு நிகராக வலிமையான தலைவர்கள் காங்கிரசில் இல்லை எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ராகுல் காந்தியை தடுப்பதில் மும்முரமாக இருப்பது கட்சியை சீர்குலைக்க உதவுவதோடு அதன் அழிவுக்கு வழிவகுக்கும். நேரு குடும்பத்தை சேராதவர்கள் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று பலரும் கூறுவது நல்ல யோசனை தான். ஆனால் இதற்கான கோரிக்கை வைத்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் யாருக்கும் அதற்கான திறன் இல்லை. காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் பரவி உள்ளது. ஆனால் வெவ்வேறு முகமூடிகளுடன் காணப்படுகிறது. அந்த முகமூடிகள் எல்லாம் கழற்றப்பட்டால் காங்கிரஸ் வலுவான கட்சியாக திகழும், என்று கூறியுள்ளார்.


Tags : Sanjay Rawat ,party ,Shiv Sena ,Rahul Gandhi , Rahul Gandhi, Leadership, Congress, Shiv Sena, MP Sanjay Rawat
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை