×

தோனி – ரெய்னா இடையே மோதல் ? சில நேரங்களில் வெற்றி தலைக்கேறும்போது இப்படி நடக்கும் : பிசிசிஐ முன்னாள் தலைவர் கருத்து..!!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி-ரெய்னா இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் 2020 போட்டிக்காக துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அணியின் துணை கேப்டன் சுரேஷ் விலகி மீண்டும் இந்தியா திரும்பினார். சுரேஷ் ரெய்னா மாமா கொல்லப்பட்டதாகவும் அதனால் அவர் இந்தியா திரும்பியதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கேப்டன் தோனி – துணை கேப்டன் ரெய்னா இடையே மோதலால் தான் ரெய்னா நாடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் தோனிக்கு தந்ததைப் போல் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாததால் ரெய்னா அதிருப்தி என கூறப்படுகிறது. கொரோனா விதிமுறையால் உடனே அறையை மாற்ற முடியாது என சென்னை அணி நிர்வாகம் கூறியதாக தகவல் கசிந்தது. மேலும் தோனி அறிவுரை படி சென்னையில் நடந்த முகாம் பற்றியும் அணி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதியானால் அச்சத்தில் அவர் ஊர் திரும்பியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் சில நேரங்களில் வெற்றி தலைக்கேறும்போது இப்படி நடக்கும்: பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடங்கவில்லை, ரூ.11 கோடி வருமானத்தை ரெய்னா இழப்பார், மேலும் அவரது தவறை உணர்ந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: சிஎஸ்கே என்பது ஒரு குடும்பம் போன்றது, சீனியர் வீரர்கள் எப்போதும் இணைந்தே இருப்பார்கள். யாருக்கு பிடிக்கவில்லையோ, யாருக்கு மகிழ்ச்சியில்லையோ அவர்கள் தாராளமாக திரும்பி செல்லலாம். தோனியுடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன்; தொற்று எண்ணிக்கை உயர்ந்தாலும் கவலை வேண்டாம் என கூறினார். காணொளியில் வீரர்களிடம் பேசிய தோனி அவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளதாக என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Conflict ,Raina ,Dhoni ,BCCI ,President , Dhoni, Raina, Conflict, Information, BCCI, Former President, Comment
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...