×

ஆலை விபத்தில் ஒருவர் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்காலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எரி குழம்பு சிதறி மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுதாமர் டோங்கர்(41) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : plant accident , In a plant accident, one person is killed
× RELATED பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள்...