×

நிலக்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை விளைபொருட்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் (2020-21) மானியம் வழங்க உள்ளது. இதன் மூலம் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் 10 இலட்சம் வரை நிதி உதவி பெற்றுபயன் பெறவாய்ப்புள்ளது. தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களுக்கான வலுப்படுத்துதல், புதிய நிறுவனங்களை துவக்குதல், பொது கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வங்கி மூலம் கடன் தொகை ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும் வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். தொழில் நுட்ப பயிற்சிகள் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள். கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நிதி வழங்கப்படும். இத்திட்டமானது மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை வழியாக தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) காஞ்சிபுரம், தொலைபேசி எண் 9843939301 ல் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : groundnut processing companies , Groundnut, processing company, up to Rs. 10 lakhs, financial assistance
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்