×

திருப்போரூர், கேளம்பாக்கம் காவல் நிலையங்களில் தொடர் கொரோனா பாதிப்பு

திருப்போரூர்: சென்னைப்புறநகர் பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் அண்மையில் ஊரடங்கு தளர்வு மற்றும் இ பாஸ் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் தங்களின் வீடுகளுக்குத் திரும்பினர். இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. திருப்போரூர் காவல் நிலைய எஸ்.ஐ., தலைமைக் காவலர் மற்றும் காவலர் ஆகிய மூன்று பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக திருப்போரூர், கேளம்பாக்கம், காயார், தாழம்பூர் பகுதிகளில் நடைபெற்ற திருட்டு, கொலை, கொள்ளைச் சம்பவங்களில் விசாரணையை மேற்கொண்ட பல போலீசார் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 40 வயதே ஆன போலீஸ் ஏட்டு கொரோனாவுக்கு பலியானார். இதனால் போலீசார் மத்தியில் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென்றும் காவலர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : police stations ,Thiruporur ,Kelambakkam , Thiruporur, Kelambakkam, Police Station, serial corona damage
× RELATED வீட்டு வேலைக்காரர்களை கட்சி...