×

இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேருக்கு கொரோனா: காவல் நிலையம் மூடல்

சென்னை: வாலாஜாபாத் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்நிலையம் மூடப்பட்டுள்ளது. வாலாஜாபாத் காவல்நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றுகின்றனர். சுழற்சி முறையில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில்  வாலாஜாபாத் காவல்நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உட்பட  8 காவலர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனால் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து காவல் நிலையத்தை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு முதல் வாலாஜாபாத் காவல் நிலையம் மூடப்பட்டு தற்போது இந்திரா நகர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஆய்வாளர் குடியிருப்பில் இன்று முதல் காவல் நிலையம் செயல்படும் என வாலாஜாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புகார் தெரிவிக்க வரும் கிராம மக்கள் இந்திரா நகர் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் செயல்படும் தற்காலிக காவல் நிலையத்திற்கு வரலாம் என தெரிவித்துள்ளனர்.

Tags : inspector ,Corona ,Police station closure , Inspector, 8 people, Corona, police station closure
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 1,164,226 பேர் பலி