×

உயரதிகாரிகளின் அதிகார போட்டியால் கோயில்களில் ஏலம் விடுவதில் சிக்கல்: அறநிலையத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு; பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: உயரதிகாரிகளிடையே அதிகார போட்டியால் சென்னை மண்டல கோயில்களில் பூஜை பொருட்கள், கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அறநிலையத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னை மண்டலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கோயில் உட்பட 3,500க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பூஜை பொருட்களை வாங்கி தருவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த ஏலத்தில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படுவர்கள் பூஜை பொருட்களுக்கு தேவையானவற்றை கொள்முதல் செய்து தருகின்றனர். அதே போன்று கோயில்களுக்கு சொந்தமாக வளாகத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்படுகிறது.

இதை குத்தகைக்கு எடுப்பவர்கள் மூலம் அறநிலையத்துறை வருவாய் ஈட்டுகிறது. இந்த நிலையில், அறநிலையத்துறை சார்பில் கடந்த ஜூன் மாதத்துக்குள் கோயில்களில் பூஜை பொருட்கள் கொள்முதல் மற்றும் வளாக கடைகள், மார்க்கெட்டில் உள்ள கடைகள் ஏலம் விட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் சார்பில் ஏலம் நடத்துவதற்கான உரிய ஆணையை பிறப்பிக்கப்படவில்லைஎன்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்தெந்த கோயில் நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதியும் முறையாக பதில் இல்லை என்றும் தெரிகிறது.

இதனால், அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள சென்னையில் உள்ள கோயில் நிர்வாகம் சார்பில் தற்போது வரை ஏலம் விடப்படவில்லை. 3 மாதங்களான நிலையில், கோயில்களில் பூஜை பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான ஏலம் விடப்படாத நிலையில், ஏலம் எடுத்தவர்கள் தற்போது பூஜை பொருட்களை வழங்குவதை நிறுத்தி விட்டனர். இதனால், கோயில் நிர்வாகம் சார்பில் பூஜை பொருட்களை தினமும் வளாகத்தில் உள்ள கடைகள் மூலம் வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கோயில்களுக்கு சொந்தமாக உள்ள மார்க்கெட், கடை ஏலம் விடப்படாத நிலையில், மறு ஏலம் மூலம் ஏற்கனவே ஏலம் எடுத்தவர்களுக்கு ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால், அறநிலையத்துறைக்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல உயர் அதிகாரிக்கும், ஆணையர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் ஆணையர்களுக்கு இடையே குடுமிபிடி சண்டை ஏற்பட்டு வருகிறது. அவர்களுக்குள் நடக்கும் அதிகாரப்போட்டியால் இணை ஆணையர் அலுவலகத்தில் அனுப்பும் கோப்புகளுக்கும் உரிய அனுமதி கிடைப்பதில்லை. இதனால், கோயில் நிர்வாகம் ஏலம் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிகாரிகளுக்குள் நடக்கும் அதிகாரப்போட்டியால் இணை ஆணையர் அலுவலகத்தில் அனுப்பும் கோப்புகளுக்கு உரிய அனுமதி கிடைப்பதில்லை.

Tags : Treasury , Aristocracy, power struggle, temple auctions, trouble, treasury, crores, loss of revenue
× RELATED உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி...