×

பெங்களூரில் கைது செய்யப்பட்ட போதை கடத்தல் கும்பலுடன் சொப்னா கோஷ்டி தொடர்பு: தங்கம் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்

திருவனந்தபுரம்: பெங்களூருவில் சிக்கிய போதைப்பொருள் வியாபாரிகளுடன், தங்கம் கடத்தல் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடத்திய அதிரடி சோதனையில், கன்னட டிவி நடிகை அனிகா, கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த முகமது அனூப் (39), பாலக்காட்டை சேர்ந்த ரவீந்திரன் (37) ஆகியோர் கைது  செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் கன்னட, மலையாள சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது அனூபுக்கும், திருவனந்தபுரம் தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஸுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது தவிர, கேரள  முக்கிய அரசியல் பிரமுகரின் நெருங்கிய உறவினருடனும் முகமது அனூபுக்கு தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் மூலமாக தங்கம் கடத்தி சிக்கியுள்ள சொப்னாவும், சந்தீப் நாயரும் பெங்களூருவில் பதுங்கி இருந்தபோதுதான் கைது செய்யப்பட்டனர். அன்றயை தினம், முக்கிய கேரள அரசியல் பிரமுகரின் உறவினரை முகமது அனூப் பலமுறை போனில் அழைத்துள்ளார். மேலும், தங்கம் கடத்தலில் சிக்கியுள்ள ரமீசையும் பலமுறை அழைத்து பேசியுள்ளார். முகமது அனூப்பின் செல்போன் அழைப்புகளை பரிசோதித்தபோது இந்த திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. சொப்னாவும், சந்தீப் நாயரும் கைது செய்யப்பட்டபோது, பெங்களூருவில் தலைமறைவாக என்ன காரணம் என என்ஐஏ கேட்டது. அப்போது அவர்கள் சரியான பதிலை கூறவில்லை. இந்த போதை கும்பலின் ஆதரவுடன்தான் இவர்கள் பெங்களூருவில் பதுங்கி இருந்துள்ளனர் என உறுதியாகியுள்ளது.

Tags : drug trafficking gang ,Sopna Koshti ,Bangalore , Arrest in Bangalore, drug trafficking gang, Sopna gang affiliation, gold smuggling, new twist
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...