எனக்கு 38; உனக்கு 22 5 கணவன்களுக்கு டாடா காட்டி விட்டு வாலிபரை 6வது திருமணம் செய்த பெண்: மருதமலை சினிமா பாணியில் பரபரப்பு

பெங்களூரு: 38 வயது பெண் ஒருவர் 22 வயது இளைஞரை 6வதாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவான ‘மருதமலை’யில் காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் தனது புது கணவருடன் ஓடி வந்து, வடிவேலிடம் உதவி கேட்பார். வடிவேல் அவர்களை திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, அவளது 5 கணவர்கள் அடுத்தடுத்து வந்து இடைமறிப்பார்கள். அதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் கம்பிஹள்ளி பகுதியில் நடந்துள்ளது.

கம்பிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (22). இவர் தன்னைவிட வயதில் மூத்த ரம்யா என்ற 38 வயது பெண்ணை காதலித்துள்ளார். சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அறிந்ததும் சந்துருவின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காவல் நிலையத்தில் இந்த விவகாரம் சென்றதும், போலீசார் சந்துருவையும், ரம்யாவையும் அழைத்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சந்துருவை திருமணம் செய்து கொண்ட ரம்யாவுக்கு ஏற்கனவே 5 கணவர்கள் உள்ளனர். ஒவ்வொருவரையும் ஏமாற்றி அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டே வந்துள்ளார்.

2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் பசவராஜ், பெங்களூரு பேக்கரி ஊழியர் கிரண், ரமேஷ், துகாராம், ரங்கேனஹள்ளி சந்துரு ஆகியோர்தான் அவரின் 5 கணவன்கள். இந்த சந்துருதான் அவருடைய 6வது கணவர். இதை கேட்ட போலீசார் சந்துருவிற்கு அறிவுரை கூறினர். ஆனால் சந்துரு, ‘எனக்கு இந்த ஆன்ட்டிதான் வேண்டும். வாழ்ந்தாலும், இறந்தாலும் அவருடன் தான் என்னுடைய வாழ்க்கை,’ என்று கூறிவிட்டார். இதையடுத்து, உறவினர்களும், பொதுமக்களும், சந்துருவை மனமாற்றம் செய்யும் முயற்சியை கைவிட்டனர். மாறாக, சந்துருவை விட்டு விடும்படி ரம்யாவிடம் கெஞ்சினர். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

Related Stories:

>