லாக்டவுனால் சினிமா துறை முடக்கம் அகஸ்தியா தியேட்டர் நிரந்தரமாக மூடல்

சென்னை: கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நடக்காததாலும், புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாததாலும் ஓடிடி தளங்களில் பல மொழிப் படங்கள் வெளியிடப்படுகின்றன. திரையரங்குகள் இயங்க இதுவரை அரசு அனுமதி கொடுக்கவில்லை என்பதால், தொடர்ந்து தியேட்டர் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடசென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இயங்கி வந்த அகஸ்தியா தியேட்டர், நாளை முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1967ல் தொடங்கப்பட்ட இந்த தியேட்டரில் 1004 இருக்கைகள் இருந்தது. சில மாதங்களுக்கு முன் ஏ.வி.எம் ராஜேஸ்வரி, மகாராணி ஆகிய திரையரங்குகள் உள்பட தமிழகத்தில் ஏராளமான தியேட்டர்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>