×

ஜம்மு மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ராஜ்வீந்தர் சிங் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா என்ற இடத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நாட்டு ராணுவம் இந்திய நிலைகளை நோக்கி போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி முன்னறிவிப்பின்றி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.  

இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரியான ராஜ்வீந்தர் சிங் படுகாயமடைந்து உள்ளார்.  உடனடியாக அவர் அங்கிருந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  எனினும் அவர் வீரமரணம் அடைந்துள்ளார்.  இதனை இந்திய ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி தேவேந்தர் ஆனந்த் தெரிவித்து உள்ளார். மேலும் நவ்ஷெரா பகுதியில் ராணுவ வீரர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Tags : officer ,Indian Army ,Rajouri ,Jammu ,attack ,Pakistan Army ,district , An Indian Army officer ,martyred , attack,Pakistan Army , Rajouri district ,Jammu
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...