×

தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்!: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

கோவை: கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று கூறினார். நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையிலும், நாட்டு இன நாய்களைப் பாதுகாக்கவும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

தற்போது கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். கால்நடை மருத்துவத்துறைக்காக உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்கா தலைவாசல் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. அதனுடைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிக்கிறது. இதில், 70 சதவீதம் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது எனவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Udumalai Radhakrishnan ,colleges ,Tamil Nadu , New veterinary colleges, set up , Tamil Nadu: Interview , Minister Udumalai Radhakrishnan
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...