×

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின் படி, சென்னையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 13, 653 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 2 ஆயிரத்து 712 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 1,621 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,577 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 1,327 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் அம்பத்தூரில் 1,087 பேரும், வளசரவாக்கத்தில் 1,051 பேரும், திரு.வி.க நகரில் 1,032 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தேனாம்பேட்டையில் 995 பேருக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 961 பேருக்கும், ராயபுரத்தில் 907 பேருக்கும், ஆலந்தூரில் 763 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெருங்குடியில் 591 பேரும், சோழிங்கநல்லூரில் 576 பேரும், மாதவரம் மண்டலத்தில் 547 பேரும், திருவெற்றியூரில் 276 பேரும், மணலியில் 157 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : zones ,Chennai ,Corona ,victims , Corona infection,Chennai , number of victims,crossed 1,000 ,6 zones .. !!
× RELATED மாநில அளவில் ஈட்டி எறிதல் முதலிடம்...