×

பேராவூரணி பகுதி கயிறு தொழிற்சாலைகளில் தொடர் திருட்டு: நடவடிக்கை எடுக்க உரிமையாளர்கள் வலியுறுத்தல்

பேராவூரணி:பேராவூரணி பகுதி கயிறு தொழிற்சாலைகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கயிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணி பகுதியில் சிறியதும், பெரியதுமான சுமார் 150க்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.தேங்காய் மட்டையிலிருந்து பஞ்சு, நார், கயிறு தயாரித்தல், தேங்காய் மட்டை கழிவிலிருந்து காயர் பித் எனப்படும் கேக்குகள் தயாரித்து விவசாய பணிகளுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், கயிறு தொழிற்சாலைகள் பலவும், முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்தன.மேலும் இப்பகுதியில் உள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன. கஜா புயலுக்குப் பிறகு தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்ததால் கயிறு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருளான தேங்காய் மட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கயிறு தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது கயிறு தொழிற்சாலைகள் மறுநிர்மானம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் கயிறு தொழிற்சாலைகளை குறிவைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது உரிமையாளர்களிடையே அச்சத்தையும், மனவேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. நாட்டாணிக்கோட்டையில் உள்ள குமணன் என்பவரது கயிறு தொழிற்சாலையில் தேங்காய் மட்டை தூள்களை காயவைக்க பயன்படும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தார்பாய்,மற்றும் டிராக்டரில் உள்ள ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு திருடி சென்று விட்டனர். இதேபோல் கடந்த சில நாட்களில் கோல்டன் பைபர் தொழிற்சாலையில் 15 ஆயிரம் மதிப்பிலான தார்பாய், பெருமாள் என்பவரது கயிறு தொழிற்சாலையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 தார்பாய், சித்தாதிக்காடு பகுதியில் உள்ள கயிறு தொழிற்சாலையில், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சோலார் விளக்கு பேட்டரி ஆகியவையும் திருடு போனது.இதுகுறித்து, பேராவூரணி காவல்நிலையத்தில், புகார் அளித்துள்ள, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குமணன் கூறுகையில்,தற்போது தொழில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொடர் திருட்டு நடைபெற்று வருவது கடும் இழப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தனிக்கவனம் செலுத்தி, திருட்டுக்கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags : theft ,area rope factories ,Peravurani ,owners ,area , Peravurani , Serial theft ,rope ,owners ,action
× RELATED பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு