×

கேத்தி பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்கும் களைச்செடிகள்: விவசாயிகள் கவலை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பல அந்நிய தாவரங்கள் உள்ள போதிலும் தற்போது செஸ்டம் தாவரங்கள் கேத்தி பள்ளத்தாக்குகளில் அதிகரித்து வருவது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, பல்வேறு அந்நிய தாவரங்களான லேண்டானா, பார்த்தீனியம் மற்றும் செஸ்டம் போன்ற தாவரங்கள் மாவட்டத்தில் நுழைந்தன. இவை வளரும் பகுதிகளில் மற்ற தாவரங்கள் வளர்வதில்லை. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்திற்கே உரித்தான தாவரங்கள் கூட காணப்படுவதில்லை. பார்த்தீனியம் போன்ற செடிகளால் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சரும நோய்கள் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படுகிறது.

அதேபோல் செஸ்டம் வகை களைச் செடிகள் உள்ள இடங்களில் புல்வெளிகளும் காணப்படுவதில்ைல. மேலும், இவற்றை கால்நடைகள் உட்கொள்வதில்லை. மேலும், இவைகள் விளைநிலங்களையும் ஆக்கிரமிக்க துவங்கி விடுகிறது. தற்போது கேத்தி பள்ளத்தாக்கு பகுதிகளில் இவ்வகை தாவரங்கள் அதிகமாக காணப்படுவதால் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.



Tags : Kathy,Valley, Invasive, Farmers, Concerned
× RELATED சென்னை எழும்பூர்- நாகர்கோவில்...