×

சாத்தனூர் அணையில் அச்சுறுத்தும் முதலைகள்: எச்சரிக்கை பலகை வைத்த வனத்துறையினர்

தண்டராம்பட்டு: சாத்தனூர் அணையில் முதலைகள் அதிகரித்து அச்சுறுத்தி வருவதால், உள்ளே யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில் ஏலம் விடப்பட்டு, ஏராளமான மீன் வகைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த அணையில் வளர்க்கப்படும் மீன்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சாத்தனூர் அணையில் வளர்க்கப்படும் மீன்களை, சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், இரவு நேரங்களில் சென்று வலை போட்டு பிடிக்கின்றனர்.

அவ்வாறு செல்லும் கிராம மக்கள் சாத்தனூர் அணையில் இருக்கும் முதலைகளால் கடிபட்டு இறக்கும் சம்பவங்கள் நடக்கிறது.தற்போது, சாத்தனூர் அணையில் முதலைகள் எண்ணிக்கை அதிகரித்து அச்சுறுத்தி வருகிறது. இதையறிந்த வனத்துறையினர் அங்கு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். மேலும், அணையில் முதலைகள் அதிகரித்துள்ளதால் திருட்டுத்தனமாக சென்று மீன்களை பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Foresters ,Sathanur Dam , Threatening, crocodiles ,Sathanur, Foresters,warning ,sign
× RELATED முக்கூருத்தி, சைலன்ட்வேலி தேசிய...