×

நாளை வளர்பிறை முகூர்த்தம்: இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு என்பதால் திருமண நிகழ்ச்சிக்காக வாகனத்தில் வந்து குவிந்த மக்கள்: சுங்கச்சாவடியில் அணிவகுப்பு

மண்ணச்சநல்லூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு மற்றும் நாளை வளர்பிறை முகூர்த்தம் என்பதால் நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்சி நோக்கி வந்த வாகனங்கள் சமயபுரம் சுங்கச்சாவடியில் அணிவகுத்து நின்றன.திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் நேற்று கார்கள் அணிவகுத்து சென்றன. இன்று (ஆகஸ்ட் 30ம் தேதி) ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வளர்பிறை முகூர்த்தம் என்பதால் சென்னையிலிருந்து கார்கள் அணிவகுத்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரம் காத்திருந்து சென்றன வாகனங்கள். இதுகுறித்து சென்னை கிண்டியைச் சேர்ந்த கிஷோர் (40) என்பவர் கூறும்போது, தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்னையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டோம். ஆனால் வரும் வழியில் அனைத்து சுங்கச் சாவடிகளில் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை காத்திருந்து பின்னரே செல்ல நேரிட்டது.

பொதுவாக வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணங்கள் அதிகமாக நடைபெறும். எனவே ஆவணி மாதத்தில் கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதால் சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், விருதாச்சலம் ஆகிய பகுதியில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு வேன் மற்றும் கார்கள் மூலம் திருமணத்திற்கு செல்வோர் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளில் காத்திருந்து காத்திருந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.திருமண வைபவங்களுக்கு பெரும்பாலோனோர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுப்பது ஊரடங்கு காலத்திலும் வழக்கமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்று கூறினார்.

Tags : Waxing Ceremony ,wedding ,wedding ceremony , Tomorrow,Waxing , vehicles , wedding, ceremony a,customs
× RELATED மழை பெய்தாலே குண்டும், குழியும்தான் கன்னிகாபுரம் மக்கள் புலம்பல்