×

சீர்காழி அருகே மணல் கொள்ளையால் கழுமலையாற்றில் உடைப்பு: 30 கிராமங்களில் சம்பா சாகுபடி பாதிப்பு

கொள்ளிடம்: சீர்காழி அருகே சட்டவிரோத மணல் கொள்ளையால் கழுமலையாற்றில் ஏற்பட்ட உடைப்பால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சீர்காழி அருகே கொண்டல், மேலதேனுர், வள்ளுவக்குடி, நிம்மேலி, ஆலஞ்சேரி, மருதங்குடி, அகணி, கோடங்குடி, வருகுடி, கோவில்பத்து, தென்னங்குடி, ராமபுரம், தடாளன்கோவில். சீர்காழி, தென்பாதி, சட்டநாதபுரம், கைவிளாஞ்சேரி, திட்டை, தில்லைவிடங்கன், சிவனார்விளாகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் கழுமலையாறு பாசன வாய்கால் மூலம் பாசன வசதி நடைபெற்று வருகிறது. மேலும் சீர்காழி நகர்பகுதியில் நீர் ஆதாரமாக கழுமலையாறு பாசன வாய்கால் தான் உள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் 75 நாட்களை கடந்தும் கடைமடை பகுதி பிரதான பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் வராமல் காய்ந்து கிடந்தது. குறுவையை முடித்த விவசாயிகள் சம்பா நேரடி விதைப்புக்காகவது தண்ணீர் திறக்கப்படுமா என காத்திருந்தனர்.

சீர்காழி நகர வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன், விவசாயிகளின் சார்பிலும், அவர்களின் போராட்ட அறிவிப்பு குறித்தும் எடுத்துரைத்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தினார். இதனையடுத்து இரு தினங்களுக்கு முன் கழுமலையாற்றில்தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் வந்தபோது, தத்தங்குடி சட்ரஸ் அருகில் ஆற்றின் கரையோரம் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டிருந்ததால் கரை வலுவிழந்திருந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் கழுமலையாற்றில் பெரிய அளவில் உடைப்பும் ஏற்பட்டு தண்ணீர் ஓடிஅருகில் உள்ள நிம்மேலி பாசன வாய்கால்களில் உடைப்பு ஏற்பட்டது. இந்த 2 வாய்கால்கள் உடைப்பின் காரணமாக தண்ணீர் வீணாகி மற்ற பகுதிகளுக்கு செல்வது தடைப்பட்டுள்ளதால் சம்பா சாகுபடி மேற்கொண்டுள்ள 30 கிராமங்களில் இந்த ஆண்டு சாகுபடி கேள்விகுறியாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் வாய்கால்களில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்து கழுமலையாற்றில் முழுமையாக பாசன நீர் திறந்துவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : villages ,Sirkazhi , Sand, looting ,Sirkazhi , Kalumalayar, villages
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு