×

ஜெர்மனியில் கொரோனா ஊரடங்கை நீக்கக்கோரி வீதிகளில் இறங்கி போராட்டம்!: முகக்கவசங்களை கழிற்றி வீசி மக்கள் ஆவேசம்..!!

பெர்லின்: ஜெர்மனியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். கொரோனா பரவளின் தொடக்க காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பு எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வைரஸின் தாக்கம் குறைந்துவிட்டதால் ஊரடங்கை தளர்த்தக்கோரி மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் ஊரடங்கை கைவிடக்கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முகக்கவசங்களை கழிற்றி வீசி மக்கள் ஆவேசமடைந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நீடித்தது. அமெரிக்கா, ரஷ்யா, நாஜிகள் காலத்து ஜெர்மனி ஆகியவற்றின் கொடிகளை ஏந்தி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். மேலும், முகக்கவசம் அணிவதை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய ஆடைகளை போராட்டக்காரர்கள் அணிந்திருந்தனர்.

இதேபோல் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு என்ற பெயரில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். ஊரடங்கை பிறப்பித்து, மக்களின் சுதந்திரத்தை பறிப்பதை அரசுகள் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர்.


Tags : streets ,removal ,Germany ,Corona , Germany, Corona, struggle, people, obsession
× RELATED திமுகவினர் ஆர்ப்பாட்டம்