×

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 7 டன் எடையுடைய ராட்சத திமிங்கலம்!

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் கடற்கரையில் 20 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து ஏராளமானோர் அதனை பார்வையிட்டு செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து 22 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ள அழகிய கடற்கரை வாலிநோக்கம். சீறிப்பாயும் கடல் அலைகள் பாறைகளின் மீது தொடர்ச்சியாக மோதும் அழகு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

இந்நிலையில் அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருப்பதைப் போல, உடனடியாக கடலில் இறங்கி குளிப்பது என்பது இங்கு இயலாத காரியமாக உள்ளது. ஏனெனில் இக்கடற்கரையில் ஏராளமான பாறைகள் இருப்பதால், தூண்டில் மற்றும் குளிப்பதற்கு அவை ஏதுவாக இல்லை. இந்நிலையில் வாலிநோக்கம் கடற்பகுதியில் இன்று அதிகாலை 7 டன் கொண்ட திமிங்கல சுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. பின்னர் இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் உயிர்கோள வனச்சரக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் போலீசார் கடற்கரைக்கு வந்து பார்த்தபோது, 7 டன் எடையும், 20 அடி நீளமும் கொண்ட ராட்சத திமிங்கல சுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இதனையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் ராட்சத திமிங்கலத்தை பரிசோதனை செய்து, பின் அதே பகுதியில் புதைக்க ஏற்பாடும் செய்துள்ளனர். இதற்கிடையில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் ராட்சத திமிங்கலத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.


Tags : Near Sayalgudi ,Ramanathapuram District ,shore ,Sayalgudi , Ramanathapuram, Sayalgudi, 7 ton weight, giant whale!
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...