×

8 வழிச்சாலை திட்டம் எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ராமாபுரம் கிராமத்தில் நேற்று, விவசாயி ராமமூர்த்தி தலைமையில், 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘எங்களது வாழ்வாதாரமாக விளங்கும் விளைநிலங்களை அழித்து 8 வழிச்சாலை அமைக்கவிட மாட்டோம், உயிரே போனாலும் நிலத்தை தர மாட்டோம், விவசாயிகள் நலன் கருதி இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்’ என வலியுறுத்தினர்.


Tags : 8 lane project, protest, black flag, farmers demonstration
× RELATED குடகனாற்றில் தண்ணீர் திறக்க கோரி...