×

அறநிலையத்துறைக்கு புதிய கமிஷனர் நியமனம்: கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஊழியர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: அறநிலையத் துறைக்கு புதிய கமிஷனராக பிரபாகர் என்பவரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறையில் கமிஷனராக பணீந்திர ரெட்டியை 2018 டிசம்பர் 29ம் தேதி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இவர் காலத்தில் தான் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன. மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நகை, சிலைகளின் விவரங்களை ஆவணங்களை பதிவு செய்யவும், அவற்றை இணையதளத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதே நேரத்தில் கோயில் நிர்வாக பணிகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கமிஷனர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில், கமிஷனர் பணீந்திர ரெட்டி கடந்த ஜூன் 18ம் தேதி வருவாய்த்துறை நிர்வாக ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து புதிதாக அறநிலையத்துறைக்கு ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பணீந்திர ரெட்டியிடம் தற்போது கூடுதலாக அறநிலையத்துறை ஆணையர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் வருவாய்த்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அவரால் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வர முடியவில்லை. இந்நிலையில் அறநிலையத் துறை கமிஷனராக பதவி வகித்து வரும் பணீந்திர ரெட்டியை விடுவித்து அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரை. அறநிலையத்துறை புதிய கமிஷனராக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் நாளை பொறுப்பேற்க உள்ளார் என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Commissioner ,Treasury , Treasury, appointment of new Commissioner, request fulfilled, staff anticipation
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...