5 மாதங்களுக்கு பிறகு உயர்நீதிமன்றம் நேரடி விசாரணை.! முதல் கட்டமாக செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் விசாரணை

சென்னை: 5 மாதங்களுக்கு பிறகு உயர்நீதிமன்றம் நேரடி விசாரணை நடைபெறவுள்ளது. செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக விசாரணை நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக உயர்நீதிமன்றத்தின் 6 அமர்வுகளில் விசாரணை நடைபெறும். கடந்த 5 மாதங்களாக காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது. 7 நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழு நேரடி வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது. கடந்த டிசம்பர் முதல் உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் கொரோனா பரவ தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு மார்ச் 24 ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

முழு ஊரடங்கு காரணமாக இந்திய முழுவதும் உள்ள அலுவலகங்கள், நிறுவனங்கள என அனைத்தும் மூடப்பட்டது. அரசு அலவலகங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள், என அனைத்தும் மூடப்பட்டது. பொதுமக்கள் அதிகமாக கூட கூடாது என்று தியேட்டர்கள், மால்கள், பூங்காகள் என அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளுடன் அனைத்து அலுவலகங்களுக்கும்,  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் திறந்து நேரடி விசாரணை தொடங்கவில்லை.  நீதிமன்றங்களில் மட்டும் காணொலி மூலம் விசாரணை நடைபெற்று வந்தது.  இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு நேரடி விசாரணை தொடங்கவுள்ளது. செம்டம்பர் முதல் நேரடி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தொடங்வுள்ளது.  

Related Stories:

>