×

ஈரானை உலுக்கிய 14 வயது சிறுமியின் ஆணவக் கொலை..: தந்தைக்கு 9 ஆண்டு சிறைத் தணடனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

தெஹ்ரான்: ஈரானை உலுக்கிய 14 வயது சிறுமியின் ஆணவக் கொலை வழக்கில், சிறுமியின் தந்தைக்கு 9 ஆண்டு சிறைத் தணடனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த மே மாதம் ரோமினா அஷ்ரஃபி எனும் 14 வயதான சிறுமியின் காதலை ஏற்க மறுத்த அவரது தந்தை சிறுமியின் தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த ஆணவ கொலை தொடர்பாக ரோமினா அஷ்ரஃபியின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டார். ரோமினாவின் படுகொலைக்கு நியாயம் கேட்டு பலரும் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்பட்டதால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இந்த ஆணவக் கொலைச் சம்பவம் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வருத்தம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்தது. இந்த நிலையில் சிறுமியின் தந்தையான ரேசா அஷ்ரப் குற்றவாளி என்று உறுதிச் செய்யப்பட்டதால் அவருக்கு 9 வருடம் சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆணவக் கொலைக்கு இந்தத் தண்டனை குறைவு என்று அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஈரானில் நடைபெறும் மரணங்களில் 20% ஆணவ கொலைகள் என்று என்று அங்குள்ள தன்னார்வ அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு தன்னையும், தனது குடும்பத்தினரையும் பயமுறுத்தியுள்ளதாக சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், என் கணவர் மீண்டும் எங்கள் கிராமத்திற்குத் திரும்புவதை நான் விரும்பவில்லை, தீர்ப்பை மறுபரிசீலனை செய்து, இதை மரண தண்டனையாக மாற்ற வேண்டும். அந்த மனிதனுடன் 15 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன், அவரைப் பற்றி எனக்கு தெரியும். இந்த தீர்ப்பின் மூலம் அவரால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று அஞ்சுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். குற்றவாளி பாதுகாவலர் என்பதால் ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், இருந்து அவர் கடுமையான தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதே போன்று அவருக்கு வெறும் 9 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்ட்னை கொடுக்கப்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Arrest ,Iran ,prison ,honor killing ,Court , Iran, Arson, Father, Imprisonment, Romina Ashrafi
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!