×

கொரோனா ஊரடங்கை மீறி சொகுசு ஓட்டலில் தங்கிய லாலு மகன்: உரிமையாளர், மோலாளர் மீது வழக்கு

ராஞ்சி: கொரோனா ஊரடங்கை மீறி லாலு மகன் சொகுசு ஓட்டலில் தங்கியதால், ஓட்டல் உரிமையாளர், மோலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், நேற்று முன்தினம்  பாட்னாவிலிருந்து ராஞ்சி சிறையில் உள்ள தனது தந்தை லாலுவை சந்திக்க சென்றார். முன்னதாக, பாட்னாவில் இருந்து வந்த அவர், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்கியிருந்தார். அங்கிருந்து மறுநாள் காலை, ரிம்ஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது தந்தையை சந்திக்கச் சென்றார். ஆனால், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விதிமுறை மீறி தேஜ்பிரதாப் யாதவை ஓட்டலில் தங்க வைத்ததாக கூறி ஓட்டலின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ராஞ்சி நகர போலீஸ் எஸ்பி சவுரவ் குமார் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் தொற்று தடுப்பு ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது. விதிமுறைகளை மீறி தேஜ் பிரதாப் யாதவை ஓட்டலில் தங்கவைத்த ஓட்டலின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது தொற்று  நோய்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் சதர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் ஓட்டல், லாட்ஜ் செயல்பட அனுமதி கிடையாது’ என்றார்.


Tags : owner ,hotel ,Lalu ,Corona , Corona, Curfew, Luxury Hotel, Lalu's son, owner, molar, case
× RELATED என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்!