×

ஏரிச்சாலைக்குள் புகுந்த காட்டுமாடு கூட்டம்: கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஏரிச்சாலை பகுதிக்குள் நுழைந்த காட்டு மாடுகளின் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.கொடைக்கானல் நகரப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுமாடுகள் உலா வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. முக்கிய சுற்றுலா இடங்களிலும்  சுற்றுலா பயணிகள் நடமாடும் இடங்களிலும் ,பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ,பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் காட்டுமாடுகள் அவ்வப்போது  உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. காட்டுமாடுகள் நகரப் பகுதிக்குள் வருவதை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினர் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை  எந்த  நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் உள்ள கீழ் பூமி குடியிருப்பு பகுதிக்குள்  காட்டு மாடுகள்  கூட்டமாக நுழைந்தன. இந்த பகுதி சற்று குறுகலான ஒரே ஒரு சாலை உள்ள பகுதியாகும். காட்டு மாடுகள் கூட்டமாக புகுந்ததால் பொதுமக்கள் வெளியேறமுடியாமல் தவித்தனர். கூட்டமாக உள்ளே நுழைந்த காட்டு மாடுகள்  அந்த பகுதியில்  சில மணிநேரம் பாதை தெரியாமல் சுற்றித்திரிந்தன, பின்னர் ஏரிச்சாலைக்கு சென்று விட்டன இதனால் அந்த பகுதியில் நடைப்பயிற்சி செய்தவர்கள்  வேறு பகுதிக்கு சென்று தங்களை பாதுகாத்துக் கொண்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : lake ,Kodaikanal , Cattle ,entering , lake, commotion ,Kodaikanal
× RELATED பூண்டி ஏரியில் இருந்து சென்னை...