×

பழநி அருகே மின்கம்பியில் உரசி லாரி எரிந்து நாசம்

பழநி: பழநி அருகே மேல்கரைப்பட்டியில் சோளத்தட்டை ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசி எரிந்து நாசமானது.பழநி அருகே தும்பலப்பட்டியில் இருந்து சோளத்தட்டு ஏற்றிய லாரி பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அக்கரைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது. சுதாகரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் சதீஷ்  கூட்டமில்லாத இடத்தில் லாரியை நிறுத்தினார். இதுகுறித்து பழநி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் எரிந்து கொண்டிருந்த  லாரியில் இருந்த சோளத்தட்டை கீழே தள்ளி அப்புறப்படுத்தனர்.

இத்தீவிபத்தில் லாரி எரிந்து நாசமானது. டிரைவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.பழநி அருகே மின்கம்பியில் உரசியால் சோளத்தட்டை ஏற்றி சென்ற லாரி எரிந்து நாசமானது. அதை தீயணைப்பு துறை வீரர்கள் அணைக்கின்றனர்.

Tags : power line ,Palani ,death , Urasi ,lorry , death ,power ,line ,Palani
× RELATED பழநி பைபாஸில் குப்பை கழிவுகளால் நோய்...