×

பொதுமக்கள் ஒவ்வொரும் விளையாட்டையும் உடற்பயிற்சியையும் தங்களது அன்றாட நடவடிக்கைகளாக எடுத்து கொள்ள வேண்டும் : பிரதமர் மோடி

டெல்லி : விளையாட்டுத் துறையில் சாதனையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் பொதுமக்கள் இடையே விளையாட்டை பிரபலப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் விளையாட்டு துறையினருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு நாட்டிற்கு பெருமை தேடி தந்த ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

வரலாற்று புகழ்மிக்க ஹாக்கி வீரர், மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்த தினமான இன்று, ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மேஜர் தியான் சந்திற்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். ஹாக்கி விளையாட்டின் மிகப்பெரிய சாதனையாளரான மேஜர் தியான் சந்தின் திறமையை யாராலும் மறக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஒவ்வொரும் விளையாட்டையும் உடற்பயிற்சியையும் தங்களது அன்றாட நடவடிக்கைகளாக கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Modi ,public , The public should take every sport and exercise as their daily activities: Prime Minister Modi
× RELATED பருவமழையை எதிர்பார்த்து விவசாய பணிகள் தொடக்கம்