×

வேலூர் மத்திய சிறையில் பணிபுரியும் 70 போலீசாரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு: கைதிகளுக்கு கொரோனா வார்டு ஏற்பாடு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் பணிபுரியும் 195 காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அறிகுறி உள்ள 70  போலீசாரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் தனிச்சிறையில் 300க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.  இந்த சிறைகளில் 195 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், போலீசார்  மற்றும் கைதிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும் சிறையில் புதிதாக அடைக்கப்படும் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் போக்சோ சட்டத்தில் கைதானவர்  உட்பட கைதிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் 195 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டது. இவர்களில் இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்த 70 போலீசார் பரிசோதனை முடிவுகள் வரும் வரை பணிக்கு வராமல்  வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட போலீசாருக்கு பரிசோதனை முடிவுகளை விரைவாக  வழங்க கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் கைதிகளை வார்டுகளில் தங்க வைத்தால், தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை  போலீஸ் பாதுகாப்புடன் வார்டுகளில் அனுமதிக்க வேண்டியது அவசியம். இதனால் வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான  கொரோனா வார்டு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : policemen ,inmates ,Corona ,Vellore Central Jail , Isolation ,monitoring,policemen,arrangement, inmates
× RELATED சிறையில் இட்லி சாப்பிட்ட 13 கைதிகளுக்கு வயிற்று வலி