ஏற்கனவே 13 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா!

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பீதி காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. அதற்காக ஐபிஎல் அணிகள் கடந்த வாரம் முதல் ஒவ்வொன்றாக யுஏஇ சென்றடைந்தன. சிஎஸ்கே அணி ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றடைந்தது. அங்கு ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் நேற்று முடிந்த நிலையில், அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஒருவருக்கும், 12 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

13 பேரும் அவர்கள் தங்கியிருந்த துபாய் சொகுசு விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது சென்னை அணி பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெயிக்வாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது மற்றோருவர் பாதிக்கப்பட்டுள்ளது சி.எஸ்.கே அணியின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது, தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார், என அறிவிப்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களு்கு மேலும் ஒரு இடியாக உள்ளது.

Related Stories:

>