×

பழநியில் நடந்த ருசிகரம் முகக்கவசம் கொடுத்து வரவேற்று விசேஷ வீட்டில் தெர்மல் செக்கப்

பழநி:  கொரோனா காலமென்பதால் பழநியில் விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி கொடுத்து தெர்மல்  ஸ்கேன் செக்கிங் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் சமூகவிலகல் வலியுறுத்தப்பட்டு வருகிறது.  எனினும், பொதுமக்கள் மத்தியில் சமூக இடைவெளி குறித்த போதிய புரிதல் இல்லாத சூழலே நிலவுகிறது.  இதன் காரணமாக திருமணம் மற்றும்  இறப்பு நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநியில் கொரோனா விழிப்புணர்வுடன் புதுமனை புகுவிழா நேற்று நடந்தது. பழநி டவுன், பெரியப்பா நகரை  சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவன ஊழியர் சரவணன் நேற்று புது இல்லம் திறந்தார். இந்த விசேஷ நிகழ்வுக்கு வந்த அனைவருக்கும் முகக்கவசம்,  கிருமிநாசினி வழங்கப்பட்டது. அத்துடன் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்தும் வரவேற்கப்பட்டனர். சமூக அக்கறையுடன்   இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : home ,Palani , Welcome , delicious ,masquerade ,Palani,check
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...