×

விப்ரோ நிறுவனம் சார்பில் ஐஜினிக்ஸ் பொருட்கள் அறிமுகம்

சென்னை: மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான விப்ரோ, தனது வாடிக்கையாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க ஐஜினிக் பெயரில் புதிய வகை ரசாயன பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலும், வாடிக்கையாளர்கள் நோய் தொற்றில் இருந்து விலகி, பாதுகாப்புடன் வாழ்வதற்காகவும் விப்ரோ நிறுவனம் தனது தரமான தயாரிப்பின் அங்கமாக விளங்கும் ஐஜினிக்ஸ் பெயரில் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரமான ரசாயன பொருட்களை பயன்படுத்தி தயாரித்துள்ள சானிடைசர், ேஹண்ட்வாஷ் மற்றும் சோப் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இவை, எப்எம்சிஜி தரத்துடன் 99.9 சதவீதம் கிருமிகளை அழிப்பதுடன், தோல் பாதிப்பு உள்பட எந்தவித பக்க விளையும் இல்லாத வகையில் தயாரித்துள்ளதாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Wipro ,Introduction , Introduction , Wipro Company, Eigenix Products
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...