×

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 143 இந்தியர்கள் மீட்பு

சென்னை: மலேசிய நாட்டிற்கு போலி பாஸ்போர்ட்களில் சென்றவர்கள், பாஸ்போர்ட் காலாவதியாகி தங்கியிருந்தவர்கள், பாஸ்போர்ட்களை தவறவிட்டுவிட்டு இந்தியா திரும்ப முடியாமல் தவித்தவர்கள் ஆகிய வெளிநாட்டவரை மலேசிய அரசு கண்டுபிடித்து அங்குள்ள முகாம்களில் வைத்திருந்தது. இவர்களில் 2 பெண்கள் உட்பட 143 பேர் இந்தியர்களை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவெடுத்தது. இதையடுத்து மலேசிய நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்பு அவர்களுக்கு இந்தியா திரும்புவதற்கான எமர்ஜென்சி சர்டிபிக்கெட்களை இந்திய தூதரகம் வழங்கியது.

இதையடுத்து, அங்கிருந்து சிறப்பு விமானத்தில் நேற்று முன்தினம் காலை இந்தியாவிற்கு  அனுப்பியது. இவர்கள் சென்னை வந்தனர்.  அதன்பின்பு அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.  
இதையடுத்து, இவர்கள்   மேலக்கோட்டையூரில் உள்ள தனியார்  கல்வி நிறுவனத்தில், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.







Tags : 143 Indians ,Malaysia , Malaysia, 143 Indians, rescue
× RELATED வெளிநாடு தப்ப முயன்ற குற்றவாளி சென்னையில் கைது