×

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு கொரோனா

சென்னை: திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் (72). இவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அவரது மனைவி அனுசுயா (68), ஜெகத்ரட்சகனின் மைத்துனர் காமராஜ் (59) ஆகியோருக்கும் நடத்தபட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனைத்தொடர்ந்து, ஜெகத்ரட்சகன் உட்பட 3 பேரும்  குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஜெகத்ரட்சகன் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், சிறப்பு  வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

Tags : Jagathratsakan ,Corona ,DMK , DMK, M.P. Jagathratsakan, Corona
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி