×

பாக்கெட் நொறுக்குத் தீனிகளும் கிடைக்கும்; பாக்கெட் நொறுக்குத் தீனிகளும் கிடைக்கும்: விமான பயணத்தில் சுடச்சுட சாப்பாடு: மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: சர்வதேச விமானப் பயணத்தின்போது பயணிகளுக்கு சுடச்சுட சாப்பாடு, நொறுக்குத்தீனிகள், பானங்கள் வழங்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 23ம் தேதி முதல், இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதே நேரம், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக. ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. தற்போது, 3ம் கட்ட தளர்வுகள் அமலில் இருக்கின்றன.

இந்த தளர்வுகளின் மூலமாக, மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த ஜூலை 16 முதல் சர்வதேச விமான சேவையும் தொடங்கப்பட்டது. இதில், குளிர்பதனம் செய்யப்பட்ட பாக்கெட் உணவுகள், பானங்கள் மட்டுமே பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, பாதுகாப்பான முறையில் பாக்கெட் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகள், சூடான உணவுகள் மற்றும் பானங்களை வழங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. உள்ளூர் விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு, அவர்கள் பயணிக்கும் நேரத்தைப் பொறுத்து இதில் மாற்றம் இருக்கும். சர்வதேச பயணத்தில் வழக்கமான நெறிமுறைகள் பின்பற்றப்படும்.

Tags : government , Air travel, meals, federal government, permission
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...