×

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: முதல்வர் பழனிச்சாமி திட்டவட்டம்

தஞ்சை: தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டமன்றம் உள்பட அனைத்து தேர்தலிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளரிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் அதிமுக தலைமையில் தான் தேர்தலை சந்தித்து வருகிறோம் என்று முதல்வர் கூறினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்பட்டது என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

முன்னதாக அதிமுக தேர்தல் வரலாற்றில் இதுவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைந்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு ஊழியா்கள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உயிரை பயணம் வைத்து கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் துய்மைப் பணியாளர்களை அரசு ஊக்குவித்து வருகிறது. கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதிமுக தேர்தல் வரலாற்றில் இதுவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைந்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், அது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், எங்களுடன் கூட்டணி வைக்க நினைப்பவர்களுடன் கூட்டணி தொடரும் என்றும் கூறியிருந்தார்.



Tags : Palanichamy ,AIADMK ,alliance ,Palaniachai ,Tamil Nadu ,Coalition , Chief Minister Palaniachai, AIADMK, Coalition
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...