×

மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்: நீதிபதிகள் எச்சரிக்கை

மதுரை: மணல் கடத்தலை தடுப்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் துணையுடன் மணல் கடத்தப்படுவதாக ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே நிலைமை நீடித்தால் தலைமை செயலாளரை காணொலி மூலமாக விசாரிக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை புகார்கள் வந்துள்ளன என்று ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மணல் கடத்தலுக்காக எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என்றும் நீதிபதிகள் வினவியுள்ளனர். மணல் கடத்தல் வழக்குகள் அனைத்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிறப்பு அமர்வில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் அரசாணையின்படி மணல் குவாரிகள் அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உபரி மண் எடுக்க, சவுடு மண் எடுக்க என்று உரிமம் வழங்கி விட்டு, மணல் கடத்தலை அரசே ஊக்குவிக்கிறது. அரசின் பதில் மனுக்களில் இருக்கும் திட்டங்கள், அரசாணைகள் அனைத்தும் பெயரளவில் மட்டுமே உள்ளது. மணல் கடத்தலுக்கு உதவும் அரசு அதிகாரிகள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.



Tags : Judges , Sand smuggling, judges, warning
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...